நலவாரியம் கடந்த 1982ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள்(வேலை மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உதவிகள் கிடைக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவாரணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும்.